;
Athirady Tamil News

தாய்லாந்து பிரதமர் வரலாற்று புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம்..!! (படங்கள்)

0

இலங்கை வந்துள்ள தாய்லாந்து பிரதமர் பிரயூத் ஷான்-ஓ-ஷா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) கண்டியில் அமைந்துள்ள வரலாற்றுப் புகழ்மிக்க தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அவர்கள் தலதா மாளிகையில் உள்ள புனித தந்த தாதுவினை வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்ட தலைவர்கள் இருவரும் தலதா மாளிகை வளாகத்தில் அமைந்துள்ள உலக பௌத்த அருங்காட்சியகத்தினையும் பார்வையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் தாய்லாந்து பிரதமர் பிரயூத் ஷான்-ஓ-ஷா இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 13 =

*