;
Athirady Tamil News

உனது நாட்டுக்கு திரும்பி போ: பேரக்குழந்தைகளை பார்க்க சென்ற 91 வயது முதியவருக்கு நேர்ந்த கதி.!!

0

கலிபோர்னியாவில் வசிக்கும் தனது குடும்பத்தை பார்க்க சென்ற 91 வயது முதியவரை பெண்மணி ஒருவர் மோசமாக தாக்கியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 91 வயதான Rodriguez என்பவர் கலிபோர்னியாவில் வசிக்கும் தனது மகன் மற்றும் பேரக்குழந்தைகளை பார்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் செல்வது வழக்கம்.

அதே போன்று, இந்த முறையும் Willowbrook – இல் வசிக்கும் மகனை பார்க்க சென்றிருந்துள்ளார். தனது மகன் வீட்டில் இருந்து அங்கிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு நடந்துசென்றார்.

போகும் வழியில் அங்கிருந்த பூங்காவில் அமர்ந்திருக்கிறார். அப்போது, அங்கு தனது குழந்தையுடன் வந்த பெண்மணி, முதியவரை பார்த்து எதற்காக நீ எங்கள் நாட்டுக்கு வந்திருக்கிறாய். உங்கள் நாட்டுக்கு திரும்பி போ என தனது கையில் இருந்த கம்பால் முதியவரை தாக்கியுள்ளார். தொடர்ந்து விடாமல் கீழே தள்ளிவிட்டு மண்டையை உடைத்துள்ளார்.

இதில் முதியவர் நிலைகுலைந்து விழுந்துள்ளார். இதனைதொடர்ந்து முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வீடு திரும்பியுள்ள முதியவரின் முகத்தில் காயங்கள் இன்னும் குணமாகவில்லை.

இதுகுறித்து முதியவரின் மகன் கூறியதாவது, எனது தந்தை தற்போது முடியாமல் இருக்கிறார். அவரை தாக்கிய பெண்ணை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும் என கூறியுள்ளார். அந்த பெண்குறித்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 5 =

*