;
Athirady Tamil News

மொட்டையடித்து சிறுநீர் கழித்து சித்ரவதை: முன்னாள் காதலியின் கொடூர செயல்களால் உயிருக்கு போராடும் இளம்பெண்..!!

0

தனது காதலனின் முன்னாள் காதலியிடம் சிக்கிய 17 வயது இளம்பெண் பல மணி நேர பாலியல் துன்புறுத்தல் மற்றும் உடல்ரீதியான உயிருக்கு ஆபத்தான துன்புறுத்தலுக்கு பின் மீட்கப்பட்டிருக்கிறார்.ரஷ்யாவை சேர்ந்த central Perm Krai பகுதியில் இகார் என்பவரின் காதலி சாரா என்பவர்தான் பாதிக்கப்பட்ட இளம்பெண். இகாரின் முன்னாள் காதலி அலெக்ஸாண்டரா என்பவர் இவர்கள் நெருக்கமாக பழகியதை கண்டு ஆத்திரம் அடைந்துள்ளார்.

மேலும் இகாரின் வாரிசை அலெக்ஸாண்டரா சுமப்பவராகவும் தெரிய வருகிறது. ஆரம்பத்தில் சாராவிற்கு எங்கள் வாழ்வில் தலையிடாதே. எங்கள் வாழ்வில் குறுக்கிட்டால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி ஒரு குறுஞ்செய்தி ஒன்றை அலெக்ஸாண்டரா அனுப்பியிருக்கிறார்.

ஆனால் இதனால் ஒரு பலனும் ஏற்படவில்லை இகாரை காதலிப்பதை சாரா விடவில்லை என்று தெரிந்ததும் அலெக்ஸான்ட்ரா மிக பயங்கரமான திட்டம் ஒன்றை தீட்டினார். இதற்கென தனது நண்பர்களை வேலைக்கு தேர்ந்தெடுத்தார். 16 வயதான கிறிஸ்டினா பொயார்கோவா மற்றும் மரியா ஷேப்புடீவா ஆகிய இருவரையும் மற்றும் 20 வயதான அனஸ்டேசியா வொரன்சிகினா என்பவரையும் இந்த திட்டத்தில் சேர்த்து கொண்டார்.இவர்கள் அனைவரும் ஒன்றாக சாராவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்குதான் தனது கொடுமைகளை தனது நண்பர்கள் உதவியுடன் அரங்கேற்றியிருக்கிறாள் அலெக்ஸான்ட்ரா.

சாராவை மொட்டையடித்த அந்த கும்பல் அவளை பாலியல் துன்புறுத்தல் செய்தது. மேலும் அவள் மேல் அங்குள்ள அனைவரும் சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் குற்றவாளிகளில் ஒருவர் மூலம் மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டது அதன்பின் குளியறைக்குள் சாராவை இழுத்து கொண்டு போன கும்பல் அங்கு தனது அடுத்த சித்திரவதையை அரங்கேற்றியது. படிக்கும்போதே மனது நடுங்கும் ஒரு செயலை எப்படி அந்த கும்பல் 17 வயது பெண்ணிற்கு செய்ய துணிந்தனர் என்று யோசிக்க முடியவில்லை.

சாராவின் பிறப்புறுப்பில் ஷவரின் குழாயை சொருகி அதில் கொதிக்கும் வெந்நீரை பீய்ச்சியுள்ளனர். அதன்பின்னர் மயக்கமான சாராவின் வீட்டில் இருந்து செல்போன் லேப்டாப் போன்ற பொருட்களை திருடிய அலெக்ஸாண்டரா கும்பல் அங்கிருந்து வெளியேறியது.

இத்தனை சித்ரவதைகளை தாங்கிய சாரா தனது கடைசி முயற்சியாக அவசர பொத்தானை அழுத்தியிருக்கிறார். உடனடியாக அவருக்கு முதலுதவிகள் செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சாராவிற்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் வெந்நீர் உள்ளே பாய்ந்ததால் சாராவின் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தற்போது அவை சுத்திகரிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிய சாரா திரும்ப பழையபடி குணமடைய பல நாட்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவத்தில் பொலிஸார் மூவரை கைது செய்திருக்கின்றனர். முக்கிய குற்றவாளியான அலெக்ஸான்ட்ரா கர்ப்பமாக இருப்பதால் அவரை வீட்டு காவலில் சிறை வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குற்றம் நிரூபிக்க படும்பட்சத்தில் மைனர் குற்றவாளிகள் உடன் சேர்த்து அனைவருக்கும் 15வருட கடுங்காவல் தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்க படுகிறது.

முன்னாள் காதலனோடு வாழ்வதற்காக ஒரு பெண் இன்னொரு சக பெண்ணை நண்பர்களோடு சேர்ந்து இத்தனை கொடூரமாக சித்ரவதை செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + thirteen =

*