;
Athirady Tamil News

ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..!!

0

ஈராக்கில் 1921 முதல் 1958 வரை மன்னராட்சி நடைபெற்றது. அதற்கு எதிரான நடந்த புரட்சியில் 14-7-1958-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்துல் கரீம் காசிம் ஈராக்கின் புதிய தலைவரானார்.

1921 முதல் 1933 வரை ஹசிம் குடும்பத்தைச் சேர்ந்த பைஷல் I மன்னராக இருந்தார். இவரது முழுப்பெயர் அலி அல்-ஹாசிமி. 1933 முதல் 1939 வரை காஜி I மன்னராக இருந்தார். அதன்பின் 3-வது மன்னராக 1939 முதல் 1958 வரை பைஷல் II மன்னராக இருந்தார். இவர் காஜியின் மகன் ஆவார்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1933- ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

* 1948 – இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன் வைத்து சுடப்பட்டார்.

* 1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 225 பேர் பரிதாபமாக இறந்தனர்.

* 1967 – நாசாவின் ‘சேர்வெயர் 4’ என்ற ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. * 1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200-வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.

* 1995- MP3 பெயரிடப்பட்டது.

* 1995 – இலங்கையின் புக்காரா ரக விமானம் ஒன்றை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

* 2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

* 2007 – ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 7 =

*