;
Athirady Tamil News

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.10 கோடி காணிக்கை செலுத்திய வெளிநாட்டு இந்திய பக்தர்..!!

0

அமெரிக்காவில் தொழிலதிபர்களாக உள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இருவர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கையாக அளித்துள்ளனர்.

இகா ரவி எனும் நபர் ரூ.10 கோடியை வெங்கடேஷ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக காணிக்கையாக அளித்தாகவும், மற்றொருவரான ஸ்ரீனிவாஸ் குட்டிகோண்டா என்பவர் காணிக்கையாக ரூ.3.5 கோடிக்கான காசோலையை நேரில் அளித்ததாகவும் திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி தெரிவித்தார்.

மேலும், திருப்பதியில் இயங்கிவரும் மக்கள் நல அறக்கட்டளைகள், மருத்துவமனைகள் மற்றும் அனாதை ஆசிரமங்களுக்கு தாம் அளித்த காணிக்கை தொகையை பயன்படுத்தி செலவிட வேண்டும் என ஸ்ரீனிவாஸ் குட்டிகோண்டா தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பதி தேவஸ்தான தலைவர் புட்ட சுதாகர யாதவ், ஆந்திரப்பிரதேச தொழில்துறை அமைச்சர் என்.அமர்நாத ரெட்டி முன்னிலையில் அவர்கள் இந்த காணிக்கையை வழங்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*