;
Athirady Tamil News

நாம் காணாமல்போனோர் அலுவலகத்தை ஏற்கவில்லை’: யாழில் போராட்டம்..!! (படங்கள்)

0

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பிராந்திய மட்டத்திலான பொது அமர்வை புறக்கணித்து, யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மாவட்ட ரீதியாக காணாமல் போனோரின் உறவினர்களைச் சந்தித்து வருகின்றது. அந்தவகையில், யாழ். மாவட்டத்திற்கான அமர்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, மண்டப வாயிலில் கூடிய உறவுகள் ‘நாங்கள் காணாமல் போனோர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளவில்லை’ எனத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். அமர்விற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் ஏழு ஆணையாளர்களும் அங்கு விஜயம் செய்துள்ள போதிலும், எவரும் அமர்வில் சாட்சியம் அளிக்க முன்வராததுடன் மண்டபத்திற்கு உள்ளே சென்று ஆணையாளர்கள முன்னிலையிலும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தாம் காணாமல் போனோருக்கான அலுவலகத்தையே ஏற்காத போது, அமர்வுகள் எதற்கு என்ற ஆதங்கத்தில் உறவுகள் அமர்வை புறக்கணித்து இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 3 =

*