;
Athirady Tamil News

அமைச்சு பதவியை வழங்குமாறு கோரி வடக்கு முதலமைச்சருக்கு கடிதம்..!!

0

தான் முன்னர் வகித்த அமைச்சு பதவியை மீண்டும் வழங்குமாறு கோரி வட மாகாண முதலமைச்சருக்கு முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதமானது நேற்று (வெள்ளிக்கிழமை) க.வி.விக்னேஷ்வரன், அனந்தி சசிதரன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு எழுதப்பட்டுள்ளதுடன் இதன் பிரதி ஒன்று ரெஜினோல்ட் குரேயிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் கையளிக்காத பட்சத்தில், நீதிமன்ற கட்டளையை மீறியதாக அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த கோரிக்கையினை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி அன்றும் பா.டெனீஸ்வரன் கடிதம் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*