;
Athirady Tamil News

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட மருத்துவ முகாம்..!!! (படங்கள்)

0

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து மீண்டும் மீள் குடியேறியுள்ள மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஜீ.குணசீலனின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) காலை விசேட மருத்துவ முகாம் இடம்பெற்றது.

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி மகா வித்தியாலயத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை குறித்த விசே மருத்துவ முகாம் இடம்பெற்றது.

இதன் போது வைத்தியர்களின் இலவச வைத்திய பரிசோதனைகள் இடம் பெற்றதோடு, இலவசமாக மருந்து பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும் தேவைப்பட்டவர்களுக்கு பரிசோதனைகளுக்கு அமைவாக இலவசமாக மூக்குக் கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த இலவச வைத்திய முகாமில் மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாலம்பிட்டி, கீரிச்சுட்டான், முள்ளிக்குளம், தச்சனா மருதமடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 200 ற்கும் மேற்பட்டவர்கள் கலந்து பயன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*