;
Athirady Tamil News

வரிக் குறைப்பிலேயே எரிபொருளின் விலை தங்கியுள்ளது: அர்ஜுன ரணதுங்க..!!

0

அரசாங்கம் எரிபொருளுக்கான வரியை குறைத்தால் மட்டுமே எங்களால் எரிபொருளின் விலையைக் குறைக்கமுடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

கனேமுல்லவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இராணுவ வீரர்களின் நினைவுச் சின்னத்தை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“நான் மக்களுக்காகவே எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்தேன். எரிபொருளுக்கான வரியைக் குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையைக் குறைக்க முடியும்.

நாம் எரிபொருள் விலை அதிகரிக்க தீர்மானம் எடுக்கும் போது பொதுமக்களை கவனத்திற் கொண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும்.

பெற்றோலிய கூட்டுத்தாபனமானது பொதுமக்களுக்கு சேவை வழங்கும் நிறுவனமாக இருக்கவேண்டுமே தவிர இலாபமீட்டும் நோக்குடன் செயற்படக்கூடாது.

ஆனால். அரசின் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் வரியிலேயே தங்கியுள்ளதால், வரியையும் குறைக்க முடியாது. அமைச்சரவையும் விருப்பமின்றியே எரிபொருள் விலையை அதிகரிக்க சம்மதித்தது” என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*