;
Athirady Tamil News

சாவுத் தண்­டனை வழங்க – பௌத்த பீடங்­கள் ஆத­ரவு..!!

0

போதைப் பொருள் வர்த்­த­கர்­க­ளுக்கு சாவுத் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­ வதை ஆத­ரிக்­கும் வகை­யில் முக்­கிய பௌத்த பீடங்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ளன. நாட்டு மக்­க­ளின் பொது நல­னுக்­காக குற்­றங்­க­ளைத் தடுக்­க­வும் சமூ­கத்தை நல்­வ­ழிப்­ப­டுத்­த­வும் கடு­மை­யான சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில் தவ­றில்லை என்று இலங்­கை­யின் அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்து மாநா­யக பீடங்­கள் தெரி­வித்­துள்­ளன.

போதைப்­பொ­ருள் கடத்­தல் மற்­றும் அத­னு­டன் தொடர்­பு­டைய பெரிய குற்­றங்­களை செய்­யும் சிறைக் கைதி­க­ளுக்­குச் சாவுத் தண்­டனை வழங்­கப்­ப­டு­வது குறித்­துச் சமூ­கத்­தில் பல்­வேறு கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யில் பௌத்த பீடங்­கள் இத­னைக் குறிப்­பிட்­டுள்­ளன.

அஸ்­கி­ரிய பீட ஆவ­ண­வாக்­கல் அதி­காரி வண மெத­கம தம்­மா­னந்த தேரர் இது தொடர்­பில் தெரி­வித்­த­தா­வது: நாட்டு மக்­க­ளின் நலன்­க­ளைக் கருத்­தில் கொண்டு அவர்­க­ளைப் பாது­காக்க சட்­டங்­கள் தேவைக்­கேற்ப பயன்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும். மன்­னர் கால­மாக இருந்­தா­லும் சரி நிகழ்­கால ஆட்­சி­யாக இருந்­தா­லும் சரி அதில் மக்­கள் நலன்­சார் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது ஆட்­சி­யா­ளர்­க­ளின் முதன்­மை­யான கடமை.

குற்­றங்­க­ளைத் தடுக்க நட­வ­டிக்கை எடுத்­தால் மட்­டுமே நாட்­டுக்கு நன்­மை­யை­யும் மக்­கள் மத்­தி­யில் அமை­தி­யும் ஒழுக்­க­மும் உரு­வா­கும். இந்த இடத்­தில் பௌத்த தர்­மம் என்­பதை விட­வும் நாட்­டினை நல்­வ­ழிப்­ப­டுத்த பௌத்த தலை­மை­கள் என்ன செய்ய வேண்­டும் என்­ப­தையே சிந்­திக்க வேண்­டும் எனக் குறிப்­பிட்­டார்.

மல்­வத்து பீட அனு­நா­யக தேரர் திவுல்­கும்­புரே விம­ல­தம்ம தேரர் தெரி­வித்­த­தா­வது: நாட்­டின் ஆட்சி பௌத்த கொள்­கை­யால் தீர்­மா­னிக்­கப்­பட்­டா­லும்­கூட நாட்­டின் நன்மை, மக்­க­ளின் பாது­காப்பு என்ற விட­யத்­தில் பெரும்­பான்மை மக்­க­ளின் நிலைப்­பாடு, பெரு­ம­ள­வி­லான மக்­க­ளின் எண்­ணம் என்­ப­வற்­றைக் கருத்­தில் கொண்டு அதிக நன்மை ஏற்­ப­டும் தீர்­மா­னங்­க­ளையே எடுக்­க­வேண்­டும்.

பௌத்த தர்­மக் கொள்­கைக்கு அமைய நடந்­து­கொள்­ளும் நப­ராக மைத்­தி­ரி­பால இருந்­தா­லும்­கூட இப்­போது சமூக நலன் கருதி சில தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளார். இதில் பெரிய சமூக விரோ­தக் குற்­ற­வா­ளி­க­ளுக்கு சாவுத் தண்­டனை வழங்­க­வேண்­டும் என்ற நிலைப்­பாட்­டினை அவர் முன்­வைத்­துள்­ளார். நாட்­டின் மோச­மான சம்­ப­வங்­கள் குறை­வ­டைந்து அதன் மூல­மாக ஒழுக்­க­மான, அமை­தி­யான, அனைத்து மக்­க­ளும் வாழக்­கூ­டிய சூழ்­நிலை ஒன்று உரு­வா­கும் என அவர் எண்­ணு­வ­தா­கவே நாம் கரு­து­கின்­றோம்.

அவ்­வாறு சட்ட ரீதி­யில் இறுக்­க­மான நகர்­வு­களை முன்­னெ­டுப்­பது அவ­ரது கட­மை­யா­கும். சில சந்­தர்ப்­பங்­க­ளில் மதக் கொள்­கைக்கு அப்­பால் சமூ­க­நல நற்­சிந்­தனை எமக்கு வர­வேண்­டும். இவ்­வாறு சமூ­கத்­தைச் சீர­ழித்து மக்­க­ளின் அமை­தி­யைக் கெடுக்­கும் ஒரு சில நபர்­க­ளுக்கு எதி­ரா­கக் கடு­மை­யான சட்­டங்­கள் நிறை­வேற்­றப்­ப­டு­வது சமூ­கத்­துக்கு ஆரோக்­கி­ய­மா­ன­தாக அமை­யும் – என்­றார்.

இதே­வேளை கர்­தி­னால் மல்­கம் ரஞ்­சித் ஆண்­ட­கை­யும், அரச தலை­வ­ரின் தீர்­மா­னத்தை ஆத­ரித்­துக் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார். பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை அர­சின் இந்த முடி­வைக் கண்­டித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 20 =

*