;
Athirady Tamil News

இந்தோ-பசிபிக் சுங்க துணை தலைவர் பதவிக்கு இந்தியா தேர்வு..!!

0

உலக நாடுகளுக்கு இடையே பொருள் கடத்தல்களை தடுக்க உலக சுங்க அமைப்பு இயங்கி வருகிறது. உலக சுங்க அமைப்பின் மூலம் உலகில் நடைபெறும் 98 சதவிகத வர்த்தகம் கட்டுப்படுத்தப்படுகிறது.

உலகம் முழுக்க இருக்கும் 182 சுங்க அமைப்பு நிர்வாகங்களை, 6 பிராந்தியங்களாக பிரித்து உலக சுங்க அமைப்பு நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில், இந்த 6 மாகாணங்களில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் சுங்க அமைப்பு துணை தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி வரும் 16-ம் தேதி நடைபெறும் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 33 நாடுகளின் சுங்க அதிகாரிகள் மற்றும் இந்தியா முழுதும் பல்வேறு துறைமுகங்களில் உள்ள இந்திய சுங்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் 2020-ம் ஆண்டு ஜூலை வரை ஆசிய-பசிபிக் பிராந்திய சுங்க அமைப்பின் துணை தலைவர் பதவியில் இந்தியா நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − nine =

*