;
Athirady Tamil News

விவசாயிகளின் தோழனாக கைகொடுக்கும் உற்பத்தி தொழில் நிலையங்கள்- அங்கஜன் இராமநாதன்..!!

0

சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் அங்கமாக உடுவில் பிரதேசத்தில் தொழிற்படும் தொழிற்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் விவசாய பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன்,அவர்கள் .இந்தநிகழ்வில் சிரேஷ்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் பிரதி அமைச்சருக்கு உயரிய கௌரவத்தை வழங்கியிருந்தனர்.சுதந்திரக்கட்சியின் உடுவில் பிரதேச சபை உறுப்பினர் துவாரகன் அவர்களும் இணைந்திருந்தார்.

உள்ளூர் உற்பத்தி பழவகைகளினாலான தயாரிப்புக்களை வழங்கிவரும் ஜசுபி தொழிற்சாலையின் வளபயன்பாடுகள் குறித்தும் எதிர்காலத்தில் அதன் விஸ்தீரணம் குறித்தும் தொழிற்சாலை அதிகாரிகள் அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

விவசாய பழ உற்பத்தியாளர்கள் இதனால் பெரிதும் நன்மை அடைகின்றார்கள்.பழங்களை சேகரித்தல்,நியாஜமான முறையில் கொள்வனவு ,பதனிடல்,போன்றவற்றினால் விவசாய பழ உற்பத்தியாளர்கள் பயன் பெர்கூடியதாக அமைகின்றது.

விவசாயிகளின் தோழனாக இவ்வாறான சிறிய கைத்தொழில் சாலைகள் கை கொடுக்கும் எனவும் அறுவடை காலங்களில் நிலவும் விலை தளம்பல்களையும் சுதாகரித்துக்கொள்ள கூடியதாக இருக்கும் எனவும் அதில் கூட்டுறவு சங்கங்களின் வகிபாகம் அன்று தொட்டு இன்று வரை அதன் தேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கேள்வி நிரம்பலை அதிகரிக்க வேண்டும் எனவும் களனி சார்ந்தும் இவ்வாறான சிறிய கைத்தொழில் சாலைகளின் வினைதிறன்களை அதிகரிப்பதன் ஊடாக ஆரம்ப காலங்களில் காணப்பட்ட சிறந்த உற்பத்தி தரத்திலான பொருட்களை வழங்கிய தொழிற்சாலைகளை போன்று மீண்டும் நாம் ஊற்றெடுக்க வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 3 =

*