;
Athirady Tamil News

அமெரிக்கா முதல் அணுகுண்டு சோதனை செய்த நாள்: 16-7-1945..!!

0

அமெரிக்கா தனது முதல் அணுகுண்டு சோதனையை 1945-ம் ஆண்டு இதே தேதியில் நிகழ்த்தியது.

மேலும் இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்கள்:-

* 1930- எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார்

* 1942- பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து யூதர்களையும் சுற்றி வளைத்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டது.

* 1945- மான்ஹட்டன் திட்டம்: முதலாவது அணுகுண்டு சோதனையை ஐக்கிய அமெரிக்கா நியூ மெக்சிகோ அலமொகோத்ரோவுக்கு அருகில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாகச் சோதித்தது.

* 1948- இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.

* 1950- உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் உருகுவே, பிரேசிலை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

* 1955- டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது.

* 1965- பிரான்சையும் இத்தாலியையும் இணைக்கும் மோண்ட் பிளாங்க் சுரங்கப் பாதை திறக்கப்பட்டது.

* 1979- ஈராக் அதிபர் ஹசன் அல்- பாக்ர் பதவியைத் துறந்ததை அடுத்து சதாம் உசேன் அதிபராகப் பதவியேற்றார்.

* 1989- புளொட் அமைப்பின் தலைவர் உமா மகேஸ்வரன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

* 1990- பிலிப்பைன்சில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1600 பேர் பலியானார்கள்

* 1994- ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. * 1995- காங்கேசன்துறையில் விடுதலைப் புலிகளால் இலங்கை கடற்படையின் எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.

* 1994- ஷூமேக்கர்-லெவி 9 என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது.

* 2004 – மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது.

* 2006 – தென்கிழக்கு சீனாவில் இடம்பெற்ற கடற் சூறாவளியினால் 115 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + nineteen =

*