;
Athirady Tamil News

இரா­ணுவ வீர­னாக புகழ்­பெற்று மீன் வியா­பா­ரி­யாக மாறி­ய­நபர்..!!

0

யுத்­தத்­தின்­போது பெரும் வீரர்­க­ளா­கவும் தன­வந்­தர்­க­ளா­கவும் சித்­த­ரிக்­கப்­பட்ட பல­ரது வாழ்க்கை இன்று யுத்தம் முடிந்­த­கை­யோடு புரட்­டிப்போடப்பட்டுள்­ளது.

அந்­த­வ­கையில் யுத்­த­கா­லத்தில் பெரும் யுத்த வீர­ராக பல­ராலும் போற்­றப்­பட்ட சாரங்க என்ற நபர் தற்­பொ­ழுது மீன் வியா­பா­ரி­யாக உலா வரு­கிறார்.

யுத்த வெற்­றியின் ஒன்­பது வரு­ட­கால கொண்­டாட்­டங்கள் கடந்­துள்ள நிலையில் இந்த வெற்­றிக்கு தன் உயிரைப் பணயம் வைத்து யுத்தக் களத்தில் போரிட்ட இரா­ணு­வத்­தி­னரில் முக்­கி­ய­மா­னவர் இரா­ணு­வ­வீரர் சாரங்க. அவர் இன்று கலே­வெல மாத்­தளை சந்­தியில் மீன் வியா­பா­ரி­யாக தனது ஜீவ­னோ­பா­யத்தை கொண்­டு­செல்­கிறார்.

2004 ஆம் ஆண்டு இலங்கை இரா­ணு­வத்தில் தன்னை இணைத்­துக்­கொண்ட சாரங்க 6 மாத கால ஆரம்ப இரா­ணுவ பயிற்­சியை பூஸா இரா­ணுவப் பயிற்சிக்­கல்­லூ­ரியில் பெற்­றுள்ளார்.

பின்னர் 2006 ஆம் ஆண்டு 800 க்கும் அதி­க­மா­ன­வர்கள் மத்­தியில் வெற்­றி­க­ர­மாக இரா­ணுவப் பயிற்­சியை முடித்த 138 பேரில் ஒரு­வ­ராக சாரங்­கவும் வெளி­யே­றினார்.

தனது இரா­ணுவ வாழ்க்கைப் பய­ணத்தை தொப்­பி­கலை தாக்­கு­தலில் முதல் முத­லாக ஆரம்­பித்தார்.

தொப்­பி­க­லையை மீட்கும் இலங்கை இரா­ணு­வத்தின் விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான போரில் திற­மை­யாக போரிட்ட இரா­ணுவ வீர­ராகத் திகழ்ந்த சாரங்க அந்த தாக்­குதல் நட­வ­டிக்­கைக்­காக விசே­ட­மாக உரு­வாக்­கப்­பட்ட 8 பேர் அடங்­கிய சிறப்பு கொமாண்டோ படை­ய­ணி­யிலும் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்தார்.

சிறு­வ­யது முதல் சுறு­சு­றுப்­பையும் துடிப்­பான ஆற்­ற­லையும் கொண்­டி­ருந்த சாரங்­க­விற்கு இரா­ணுவ செயற்­பா­டுகள் இல­கு­வா­ன­தாக இருந்­தன.

அவ­ரது துடிப்பு மிக்க ஆற்­றலும் திற­மையும் இரா­ணுத்தில் இவர் பால் நம்­பிக்கை ஏற்­பட கார­ணி­யாக அமைந்­தது.

இவ்­வா­றான நிலையில் இலங்கை இரா­ணு­வத்­துக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இடை­யி­லான போரின் உச்­சக்­கட்­டமும் இறு­திக்­கட்­ட­மாக இடம்­பெற்ற முள்­ளி­வாய்க்கால் சமரில் தன் உயிரை துச்­ச­மென மதித்து அனைத்து தாக்­குதல் முன்­ன­கர்­வு­களின் போதும் முன்­வ­ரிசை வீர­ராக இருந்து போரிட்டார்.

யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதை அடுத்து இலங்கை இரா­ணுவ வீரர்­களை பாராட்­டு­வ­தற்கும் கௌர­விப்­ப­தற்கும் பயன்­ப­டுத்­தப்­பட்ட புகைப்படங்கள் அநே­க­மா­ன­வற்றில் சாரங்­கவின் புகைப்­ப­டங்­களே இடம்­பெற்­றி­ருந்­தன. காரணம் அவ­ரது கம்­பீ­ர­மான உடல் கட்­ட­மைப்­பாகும்.

உள்­நாட்டில் மாத்­தி­ர­மன்றி, வெளி­நாட்டு ஊட­கங்­க­ளிலும் கூட சாரங்­கவின் புகைப்­ப­டங்கள் வெளி­வர ஆரம்­பித்­தன. அதே போல் உள்­நாட்டில் இரா­ணுவ வீரர்­களை வாழ்த்­து­வ­தற்­காக வீதி­யோ­ரங்­களில் வைக்­கப்­பட்ட பதா­கைகள் அநே­க­மா­ன­வற்றில் சாரங்க இடம்­பி­டித்­தி­ருந்தார்.

இந்தப் பிர­சா­ரமே சாரங்­க­விற்கு வினை­யா­கவும், இரா­ணு­வத்தின் மீது வெறுப்­பு­ணர்ச்சி ஏற்­பட கார­ணி­யாகவும் அமைந்­தது. காரணம் சாரங்­கவின் புகைப்­ப­டங்கள் சமூ­கத்தில் அநே­க­மான பிர­தே­சங்­களில் பிர­ப­ல­மான நேரம் முதல் சாரங்­க­விற்கு இரா­ணுவ உயர் அதி­கா­ரி­க­ளி­ட­மி­ருந்து அழுத்­தங்கள் அதிகரித்­தன. இவ்­வா­றான நிலையில் சாரங்க இரா­ணுவ தலை­மை­ய­கத்­திற்கு மாற்­றப்­பட்டு தனக்கு பொருத்­த­மற்ற வேலை­களில் ஈடு­பட நிர்ப்­பந்­திக்­கப்­பட்டார்.

இவ்­வா­றான நிலை மேலும் உக்­கி­ர­ம­டைய ஆரம்­பித்­ததை அடுத்து சாரங்­க­விற்கு இரா­ணு­வத்தின் மீது வெறுப்பு ஏற்­பட்­டது. தான் நாட்­டுக்­காக தன் உயிரை துச்­ச­மென மதித்து செயற்­பட்­ட­மைக்கு கிடைத்த கெள­ர­வ­மென மன உளைச்சல் அடைந்த நிலையில் இரா­ணு­வத்தில் இருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் தான் ஓர் இராணுவ வீரர் என அடையாயப்படுத்திக் கொண்டு பல நிறுவனங்களுக்கு தொழில் தேடி சென்றும் எவரும் அவருக்கு தொழில் வழங்க முன்வரவில்லை.

இந்நிலையில், தன் சேமிப்பில் இருந்த சிறிய தொகையைக் கொண்டு மீன் வியாபாரத்தை ஆரம்பித்து இன்று கலேவெல பிரதேசத்திற்கே மீன் மொத்த வியாபாரியாக மாறி தனது மனைவியின் துணையுடன் செயற்பட்டு வருகின்றார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*