;
Athirady Tamil News

கடலில் விழுந்த மீனவரை காணவில்லை..!!

0

மோதர துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி மோதர துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற நான்கு மீனவர்கள் நேற்று (15) மீண்டும் வருகை தரும் போது படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

லியகொடவத்த, பரகஸ்தொட்ட பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பொலிஸார் மற்றும் கடற்படையினர் ஒன்றிணைந்து காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எகொடஉயன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 4 =

*