;
Athirady Tamil News

வட மாகாண சிறப்பு அமர்விலிலிருந்து – ரெலோ உறுப்பினர்கள் வெளியேற்றம்..!!

0

வடக்கு மாகாண சபை­யில், டெனீஸ்­வ­ரன் விவ­கா­ரம் தொடர்­பில் இன்று சிறப்பு அமர்­வு நடைபெற்று வருகிறது.

அதில் ரெலோ கட்சியைச் சேர்ந்த நால்வர் பங்கேற்றனர். விந்தன் கனகரட்ணம் அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார். அதன் பின்னர் நால்வரும் அங்கிருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

தவராசா மீது கோபம்- தியாகராசா வெளியேற்றம்!!

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா இன்றை சிறப்பு அமர்வில் தேவையற்ற விடயங்களை தெரிவித்துக் கொண்டிருந்தமையால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உறுப்பினர் தியாகராசா சற்றுமுன்னர் வெளிநடப்புச் செய்துள்ளார்.

டெனீஸ்வரன் விவகாரம் தொடர்பாக இன்று சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது. அதில் நான்கு உறுப்பினர்கள் ஏற்கனவே சபையில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 13 =

*