;
Athirady Tamil News

வவுனியாவில் வட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்..!! (படங்கள்)

0

வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக இன்று (16) வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றில் ஈடுபட்டனர்.

கடந்த வியாழக்கிழமை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து வட மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தார்.

அச்சம்பவத்தின்போது நெடுங்கேணி பிரதேச செயலாளரை அச்சுறுத்தும் விதமாக குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டதாகவும், வீடமைப்பு திட்டமொன்றிற்கான அடிக்கல் நாட்டும் விழாவை தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்த அந் நிகழ்வில் பிரதேச செயலாளரும் கலந்துகொண்டிருந்த நிலையில் அந் நிகழ்வுக்கு தன்னை அழைக்கவில்லை என தெரிவித்து மாகாணசபை உறுப்பினர் பிரதேச செயலாளருடன் முரண்பட்டிருந்தார் என தெரிவித்தே, இன்று நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக உத்தியோகத்தர்களால் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் லிங்கநாதனே இது ஒ;ன்றும் உங்கள் மாளிகை அல்ல, சபை பேச்சறிந்து பேசுங்கள், அரச பணி மக்கள் பணி எங்களுடன் வேண்டாம் உங்கள் உரசல் பணி, அரச அதிகாரிகள் அச்சுறுத்தல் இன்றி பணியாற்ற இடமளியுங்கள், உங்கள் அரசியல் இங்கு வேண்டாம், அரச உத்தியோகத்தர்கள் மக்கள் சேவகர்கள் அரசியல் வாதிகளின் சேவகர்கள் அல்ல போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள்
வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை அவமதிக்கும் முகமாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வேண்டத்தகாத வார்த்தை பிரயோகங்களை செய்திருந்தார். அரச அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும், இது தொடர்பாக மாகாணசபை உறுப்பினர் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அரசாங்க அதிபரிடம் இச்சம்பவம் தொடர்பாக மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + eighteen =

*