;
Athirady Tamil News

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை விளையாட்டு விழா..!! (படங்கள்)

0

முறிகண்டி தென்னிந்திய திருச்சபை புனிதபவுல் பாலர் பகல் பராமரிப்பு நிலைய மழலைகள் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. 1981ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பாலர் பகல் பராமரிப்பு நிலையத்தின் 37வது விளையாட்டு விழாவாக குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த முன்பள்ளியை சூழவுள்ள செல்வபுரம், இந்துபுரம், முறிகண்டி, வசந்தநகர், சாந்தபுரம், பொன்னகர், அறிவியல்நகர், பாரதிபுரம், கனகாம்பிகைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குழந்தைகளின் உடல் உள மேம்பாடு ஆகியவற்றை கருத்தில்கொண்டு தென்னிந்திய திருச்சபையினரால் குறிதத் முன்பள்ளி நடார்த்தப்பட்டு வருகின்றது.

தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தினால் இயக்கப்படும் குறித்த முன்பள்ளியின் 37வது விளையாட்டு வழா கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமசேவையாளர் குணசீலன், குருவானவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறார்களால் உடல்பயிற்சி மற்றம், இசையும் அசைவும், மற்றும் விளையாட்டுக்கள் சிறப்பாக நடார்த்தப்பட்டது. குறித்த சிறார்களின் எதிர்காலம், மற்றும் கிராமங்களில் வாழும் சிறார்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகளிற்காக தென்னிந்திரய திருச்சபையின் இப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டி.எஸ் தியாகராஜா அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும். இதன்புாது பேராஜரின் ஒப்பத்துடனான சான்றிதள்கழும் சிறார்களிற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*