;
Athirady Tamil News

வவுனியாவில் “புளொட்” அமைப்பின், வீரமக்கள் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது..!! (வீடியோ & படங்கள்)

0

வவுனியாவில் புளொட் அமைப்பின் வீரமக்கள் தினம் இன்று அனுஸ்டிக்கப் பட்டது..! (படங்கள் & வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் 29வது வீரமக்கள் தினம் இன்று (16) வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள உமா மகேஸ்வரன் நினைவு இல்லத்தில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்ணணியின் உபதலைவர்களில் ஒருவரும்,.நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் நடைபெற்றது.

தமீழீழ மக்கள் விடுதலை கழகத்தின் மறைந்த உறுப்பினர்களையும், அனைத்து இயக்க போராளிகளையும் யுத்த காலத்தில் மரணித்த பொதுமக்களையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அகவணக்கத்தை தொடர்ந்து கழகத்தின் (புளொட்) கொடியை க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஏற்றிவைக்க கழகத்தின் போராளி ஒருவரின் தாயார் நினைவுச்சுடரினை ஏற்றி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஸ்தாபகரும் மறைந்த தலைவருமான க.உமாமகேஸ்வரன் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து மரணித்த போராளிகளின் படங்களை பார்வையிட்ட உறவுகள் பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட & மத்தியகுழு உறுப்பினரும், வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான க.சிவனேசன் (பவன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சிரேஷ்ட & மத்தியகுழு உறுப்பினரும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசு) உட்பட கழக முக்கிய உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் போராளிகளின் உறவுகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

-“அதிரடி” இணையத்துக்காக.. “அதிரடி”யின் வவுனியா நிருபர் குணா..-

படுகொலை செய்யப்பட்ட புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தனின் நினைவஞ்சலி நிகழ்வு அனுஸ்டிப்பு..!! (வீடியோ & படங்கள்)

“புளொட்” முருங்கன் காரியாலயத்தில் நடைபெற்ற “வீரமக்கள் தின நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

பிரான்சில் சிறப்பாக நடைபெற்ற, “புளொட்” அமைப்பின் “வீரமக்கள் தின நிகழ்வு”..! (படங்கள் & வீடியோ)

மிகச்சிறப்பாக நடைபெற்ற “புளொட்” சுவிஸ் கிளையின், “29 வது வீரமக்கள் தினம்”..! (படங்கள் & வீடியோ இணைப்பு)

 

ஒற்றுமை என்பது வெறும் பேச்சளவில், மட்டும் இருக்கக் கூடாது.. – சுவிஸ் “புளொட்” வீரமக்கள் தின நிகழ்வில், “புளொட்” தலைவர் சித்தார்த்தன்..   

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*