;
Athirady Tamil News

பௌத்த விகாரையின் உருவத்தினை ஆடையில் பொறித்திருந்த பெண் கைது. வவுனியாவில் சம்பவம்..!!

0

வவுனியாவில் பௌத்த விகாரையின் உருவபடத்தை ஆடையில் பொறித்திருந்த பெண் ஒருவரை வவுனியா பொலிசார் இன்று (16) கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் தாயார் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரை பார்வையிடுவதற்காக சென்றிருந்த நிலையில் அவர் அணிந்திருந்த ஆடையில் விகாரையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததை அவதானித்த வைத்தியசாலை பொலிசார் குறித்த பெண்னை விசாரணை செய்ததுடன் அவசர பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடுமையான விசாரணையின் பின்னர் குறித்த பெண் பொலிசாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்ட்டிருந்தார்.

வவுனியா தேக்கவத்தை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குடும்ப பெண் ஒருவரே வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அப் பெண் இலங்கையில் நடைபெற்ற வன்முறை காரணமாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் கடந்த வாரமே நாட்டிற்கு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமகன் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் பொலிசார் குறித்த பெண்ணை கைது செய்யும் விவகாரத்தில் வேகமாக செயல்ப்பட்டது ஆச்சரியத்தை அளிக்கிறது என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − one =

*