;
Athirady Tamil News

மரண தண்டனை: 18 பேரின் பெயர் பட்டியல் நீதி அமைச்சிடம் கையளிப்பு..!!

0

போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 குற்றவாளிகளின் பெயர் பட்டியல் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிற்கு கையளிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் மூலம் போதைப்பொருள் கடத்தலை வழிப்படுத்தும் வகையில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுடனான வெளிநபர்கள் தொடர்பை பேணுவதை தடுக்கும் வகையில் பார்வையாளர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் பிற கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போதைப்பொருளினால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இத்தொழிலிலிருற்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை விடுபடச் செய்யும் வகையில் விழிப்புணர்வு பிரசாரமொன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், அவரது பணிப்புரைக்கமைய இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + four =

*