;
Athirady Tamil News

வட. மாகாண சபையின் விசேட அமர்வு: ரெலோ வெளியேற்றம்..!! (வீடியோ & படங்கள் இணைப்பு)

0

டெனீஸ்வரனின் அமைச்சுப் பதவி குறித்து விவாதிக்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட வட மாகாண சபையின் விசேட அமர்விலிருந்து ரொலோ வெளியேறியுள்ளது.

இந்த விவாதத்தை கோரிய உறுப்பினர்களில் தாமும் இருக்கின்ற போதிலும், இந்த விவாதத்திற்கான நோக்கம் திசைதிருப்பப்படுவதற்கும், கருத்து மோதல்களுக்குமே வழிவகுக்கும் எனத் தெரிவித்து அவர்கள் வெளியேறியுள்ளனர்.

வடக்கு மாகாணசபையின் 127ஆவது அமர்வு விசேட அமர்வாக இன்று யாழ். கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகிது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சு தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அமைச்சரவை விடயத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பில் ஆராயும் பொருட்டு பத்தொன்பது உறுப்பினர்கள் எழுத்துமூலம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இன்று விசேட அமர்வு நடைபெற்றது.

அமர்வில் ப.டெனீஸ்வரன் கலந்துக் கொண்ட போதிலும் அவர் அங்கம் வகிக்கும் கட்சியான ரெலோ அமைப்பின் ஏனைய ஐந்து உறுப்பினர்களும் விவாதத்தில் பங்கேற்பதை புறக்கணித்து அமர்விலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இவ்விடயம் உச்சநீதிமன்றில் நிலுவையில் உள்ளதனால் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை என அவைத் தலைவருக்கு கடிதம் மூலம் அறிவித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் விவாதத்தை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 9 =

*