;
Athirady Tamil News

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்த மாட்டோம்: விந்தன்..!!

0

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை பலவீனப்படுத்தும் விதத்தில் செயற்படக்கூடாது என்பதால் டெனீஸ்வரன் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்த்துக் கொள்வதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் வட.மாகாணசபை உறுப்பினருமான என்.விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

வட.மாகாணசபையில் அமைச்சரவை தொடர்பான இன்றைய (திங்கட்கிழமை) விசேட அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“டெனீஸ்வரன் தொடர்பான விவாதத்தில் கலந்து கொள்வதைத் தவிர்ப்பது தொடர்பாக கவனமான பரிசிலனையின் பின்னரே நாம் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அந்த அடிப்படையில் இந்த விவாதத்திலிருந்து ரெலோ கட்சியைச் சார்ந்த நாம் ஒதுங்கி நிற்கின்றோம் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய விவாதத்தின் கருப்பொருள் எதுவாக இருந்தாலும் கூட, அடிப்படையில் மாகாணசபைகளின் அதிகாரங்களும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர் சபையின் அதிகார வரையறைகளும், அதிகார உறவுகளும் அமைந்திருப்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

இன்றைய சூழ்நிலையில் இந்த விவாதத்தினால் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படும் என்று நாம் கருதவில்லை. ஆரம்பத்தில் இந்த விவாதத்தை கோரிய உறுப்பினர்களில் எமது கட்சி சார்ந்த ஒருசிலர் இருந்தாலும் நாம் எதிர்பார்ப்பதற்கு மாறாக விவாதத்தின் நோக்கம் திசைதிருப்பப்படுவதற்கும், கருத்து மோதல்கள் இச்சபையில் மேலும் கூர்மை அடைவதற்கும் இந்த விவாதம் வழிவகுக்கும் என்றே நாம் இப்போது கருதுகின்றோம்.

அதனால் இந்த விவாதத்திலிருந்து ரெலோ கட்சியைச் சார்ந்த நாம் ஒதுங்கி நிற்கின்றோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 3 =

*