;
Athirady Tamil News

வவுனியாவில் இருவேறு சம்பவங்களில் பெண் உட்பட இருவர் காயம்..!!

0

வவுனியா செட்டிகுளம் மருதனாமடுவ பகுதியில் கட்டுதுவக்கு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் (16) அனுமதிக்கப்ட்டுள்ளார்.

வவுனியா மருதனாமடுவ பகுதியை சேர்ந்த இந்திக்க வயது 27 என்ற நபரே மாடு மேய்பதற்காக காட்டுபகுதிக்கு சென்ற போது காட்டு விலங்குகளுக்காக வைக்கபட்டிருந்த கட்டுதுவக்கு வெடித்ததில் குறித்த நபர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த நபரின் இரு கால்களும் கடுமையான பாதிப்புக்குளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் கணவன் மனைவி மீது மீன் வெட்டும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்த மனைவி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
குறித்த தம்பதிகள் சிலகாலமகா பிரிந்து வாழ்ந்துவருவதுடன் நேற்றைய தினம் (16) இரவு 8.30 மணிக்கு வீட்டின் அருகில் மறைந்திருந்த கணவன் மீன் வெட்டுகின்ற கத்தியால் வெட்டியதிலேயே மனைவி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் மோ. சுரேந்திரா என்ற 43 வயது பெண்ணே படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.

குறித்த இரு சம்பவங்கள் தொடர்பாக அப்பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிசாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eighteen =

*