;
Athirady Tamil News

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் விடுதலையை பெற்றுதரும் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லை..!!

0

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் விடுதலையை பெற்றுதரும் என்கிற நம்பிக்கை இன்று மக்கள் மத்தியில் இல்லை! வடக்கு மாகாண விவவசாய அமைச்சர்!!

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் விடுதலையை பெற்றுதரும் என்கிற நம்பிக்கை இன்று மக்கள் மத்தியில் இருந்து உடைந்து போவதற்கு காரணம் அவர்களும் ஒற்றுமையாக இல்லை. தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்காதான் இங்கே அரசியல் நடாத்தப்படுகின்றது. அப்படியானால் இந்த இனத்தினுடைய எதிர்காலம் என்ன? என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் நேற்று (16) நடைபெற்ற புளொட் அமைப்பின் 29 வது வீரமக்கள் தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்.

எமது போராட்ட வரலாற்றிலே அகிம்சை போராட்டத்திற்கு பின்பு பேரினவாத அரசினால் ஆயுத போராட்டமாக மாற்றப்பட்டது வரை உயிரிழந்த பொதுமக்கள் மற்றும்; போராளிகளை வருடத்திற்கு ஒரு முறை நினைவு கூர வந்தாலும் கூட எமது போராட்டங்களை ஒரு நிலைபடுத்தவேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இயக்கங்களும் தமது நினைவு தினங்களை வௌ;வேறு நாட்களிலே நினைவு கூர்ந்து வருகின்றது. எம்மை பொறுத்த வரை அனைத்து நிகழ்வுகளும் ஒருங்கமைக்கப்பட்ட ஒரு ஈழ விடுதலைப் போராட்டமாக மாற்றப்படவேண்டிய தேவை எங்கள் மத்தியில் இருக்கிறது.

எங்களுடைய வரலாற்றை எடுத்து பார்கின்ற போது அழிக்கப்பட்ட, தோல்வியடைந்த இனமாக சர்வதேசத்தால் பார்கப்படுகின்ற ஒரு நிலமை இருக்கிறது. ஆனால் இந்த போராட்டமானது தோல்வியுடன் முடிந்து போகின்ற ஒன்றா? இந்த தோல்விதான் தமிழ்மக்களின் இறுதி முடிவாக என்பதை தமிழர் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட சகல தரப்பினரும் ஒன்றாக கூடி பின்னோக்கி பார்க்கவேண்டிய காலகட்டம் இன்று நெருங்கிக்கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்காலிலே இந்த போராட்டம் நிறைவு பெற்றதாக கூறுகின்றார்கள்,அது அங்கு முடக்கப்பட்டது என்பதை நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் இந்த போராட்டம் ஆரம்பித்த காலத்தில் இருந்து அதன் வரலாற்றை எடுத்து பார்போமாக இருந்தால் எங்களுடைய எதிரியுடன் போராடி மரணித்த உயிர்களை விட சகோதர படுகொலை மூலம் மரணித்த தோழர்களின் தொகை தான் அதிகம் என்பதை சகலரும் உணர்ந்திருக்கிறார்கள்.

எனவே நாம் தமிழ் மக்களின் விடுதலைக்காக தான் போராடினோமா என்கின்ற ஒரு கேள்வி இன்று எழுகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் தமிழ் மக்களுடைய விடுதலைக்காகதான் போராடிக்கொண்டிருந்தோமா? .ஆயுதங்களை ஏந்தும் போது தெளிவான சிந்தனையுடன் தான் எந்தினோமா? என்கின்ற கேள்வி எழுகிறது. நாம் இவற்றை எல்லாம் சிந்திக்கவேண்டிய காலகட்டம் உருவாகியுள்ளது. அகிம்சையை விரும்பினோம் விடுதலை கிட்டவில்லை ஆயுதத்தை எடுத்தோம் அப்பொழுதும் பயனில்லை அப்படி என்றால் எங்களுடைய அடுத்த கட்டம் என்ன சகலரும் சிந்திக்கவேண்டிய நிலமையில் இருக்கிறோம். அடுத்து என்ன செய்ய வேண்டும் நாங்கள் மட்டுமர் சிந்திப்பது? அனைத்து தமிழ் தரப்பும் சிந்திக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. இங்கு மரணித்த போராளிகளின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் தான் நாம் நடந்து கொள்கிறோமா என்றும் சிந்திக்கவேண்டும்.

நாம் அடிக்கடி கூறுகிறோம்; சர்வதேச சமூகம் எம்மை காப்பாற்றும் என்றும்; .சர்வதேச சமூகம் விடுக்கும் அழுத்தத்தின் மூலம் தமிழர்கள் ஒரு தீர்வை பெற்றுவிடலாம் என்ற நப்பாசை எம்மவர் மத்தியில் இருக்கிறது. இது சரிதானா என்பது கேள்விக்குறியே நிச்சயமாக இல்லை என்று தான் நான் கூறுவேன்.நாம் எங்களது கையிலே இந்த போராட்டததை எடுக்காமல் விடுவோமாக இருந்தால் நிச்சயமாக எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும் .நாம் கட்சியாக பிரிந்து நிற்கும் வரை இது சாத்தியப்பட போவதில்லை. எனவே இங்கேதான் ஒற்றுமையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது.

இது பேரினவாதிகளின் நாடு அல்ல சிறுபான்மையின மக்களை பெரும்பாண்மையாக கொண்டமைந்த நாடு. கடந்த தேர்தல்களி;ல் அதனை பார்க்க முடிந்தது. போராட்டம் ஆரம்பிக்ப்பட்ட போது தமிழ்; மக்களி;டம் இருந்து மலையக மக்கள் பிரிக்கப்பட்டார்கள், இணைந்து போராடிய முஸ்லீம் மக்கள் பேரினவாத சக்திகளால் திட்டமிட்டு பிரிக்கப்பட்டார்கள். பிரிவினையை ஆயுதமாக வைத்தே தனது அடக்குமுறைகளை இந்த அரசுகள் செய்து வந்துள்ளன. சாதி ரீதியான, இனரீதியான பிளவுகளை இன்றும் அவர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் விடுதலையை பெற்றுதரும் என்கிற நம்பிக்கை இன்று மக்கள் மத்தியில் இருந்து உடைந்து போவதற்கு காரணம் அவர்களும் ஒற்றுமையாக இல்லை. தனிமனிதனின் விருப்பு வெறுப்புகளுக்காதான் இங்கே அரசியல் நடாத்தப்படுகின்றது. அப்படியானால் இந்த இனத்தினுடைய எதிர்காலம் என்ன?

எனவே எங்களுக்குள் இருக்கும் பேதங்கள் முரன்பாடுகள் அனைத்தும் உடனேயே களையப்பட்ட வேண்டும். ஆயுத பலம் இன்று இல்லாமல் போயுள்ளதால் ஊருக்கு ஒரு சண்டியன், கிராமத்திற்கு ஒரு சண்டியன் என்ற நிலை உருவாகிகொண்டிருக்கிறது.

இன்று அனைத்தையும் விட்டு அரசிடம் சென்று அமைச்சு பதவிகளை பெற்று அபிவிருத்தியை செய்யலாமே என்று பலர் பேசி வருகிறார்கள். அப்படி என்றால் இங்கே மரணித்த தோழர்கள் எதற்காக மரணித்தார்கள்? இந்த துப்பாக்கியை ஏன் ஏந்தினார்கள் என்பதை நாம் சற்று உணர்ந்து கொள்ளவேண்டும்.

இன்று வெளிநாடுகளிலே இருக்கும் இளைஞர்கள் அனைவரும் விடுதலைவேட்கையுடன் இருக்கிறார்கள். யூதர்களை அழித்து ஒழித்தார்கள் அவர்கள் அழிந்தா போயினர். அவர்கள் இன்று ஒரு நாட்டையே உருவாக்கி இருக்pறார்கள். தமிழர்கள் ஒன்றும் பலவீனமானவர்கள் அல்ல யூதர்களுக்கு இணையானவர்களும் அல்ல அதற்கும் மேலானவர்கள்.;

இனிமேல் நாம் போராடவேண்டயது அறிவியல் போராட்டமாகதான் இருக்கவேண்டும். அதனை எம் கரங்களிலே எடுக்க வேண்டும். ஒவ்வொரு தமிழர்களும் தமது மூளை பலத்தை இனத்திற்காக பயன்படுத்த வேண்டும்.நாம் புத்திசாலிகளாக இருந்தமையினாலேயே யாழ் நூலகத்தை முதலில் எரித்தார்கள.; எனவே நாம் எமது அறிவை பயன்படுத்துவதன் மூலம் தான் எமக்கான விடுதலையை பெற்றுவிடமுடியும். என்று கூறினார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + thirteen =

*