;
Athirady Tamil News

எம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவருக்கு சிறைத்தண்டனை..!!

0

எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் எம்.கே. அமிலுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றம் இன்று இந்த தண்டனை உத்தரவை பிறப்பித்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

கடந்த 2013ம் ஆண்டு பொலிஸ் அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஓராண்டு சிறைத் தண்டனையை மூன்று மாதங்களில் அனுபவிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு 30,000 ரூபா நட்ட ஈடு வழங்குமாறும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − one =

*