;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி – ஒருவர் வைத்தியசாலையில்..!! (படங்கள்)

0

கண்டி – மஹியங்கன பிரதான வீதியின் தெல்தெனிய, வேகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹியங்கனையில் இருந்து தெல்தெனிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தெல்தெனியவில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (17) காலை 7 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலன்கொட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*