;
Athirady Tamil News

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பாரிய நிதி மோசடிகள்: ஜி.ரி.லிங்கநாதன் குற்றசாட்டு..!!

0

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் குற்றசாட்டு!

12-07-2018 வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தமை தொடர்பாகவும் வடக்கு பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (17) வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதன்போது கருத்து தெரிவி;க்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பிளர் ஜி.ரி.லிங்கநாதன்
வவுனியா வடக்குபிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ள பாரிய மோசடி மற்றும் ஊழல் விடயங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடரும் என்றும் அது தொடர்பாக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடவுள்ளதாகவும் பொது மக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பாக தன்னிடம் நேரடியாக முறையிடுமாறும் கோரிக்கை விடுத்தார்

வடக்குபிரதேசசெயலக ஒருங்கினைப்பு குழு கூட்டத்தில் இருந்து நான் வெளியேறிதாகவும்,அரச ஊழியர்களை அச்சுறுத்தியதாகவும் நேற்றயதினம் வவுனியா வடக்குபிரதேச செயலகத்தின் ஒரு சில ஊழியர்களின் ஏற்பாட்டில்; ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது .இப்படியான ஒரு சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்றுதான் நான் அன்றயதினம் வேண்டும் என்றே வெளிநடப்பு செய்தேன். காரணம் கிட்டதட்ட 8 ஆண்டுகளாக பிரதேச செயலாளரும்,அவருடன் இணைந்த 7 உத்தியோகத்தர்களும்; வவுனியா வடக்கிலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும் சலுகைகள்,பணம் என்பனவற்றை சுறண்டி தாங்கள் ஏப்பம் இட்டுள்ளனர் என குற்றஞ்சாட்டினார்

அண்மையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் 200 மில்லியன் ரூபாயை ஒதுக்கி இருந்தது. ஆனால் இதுவரை மக்கள் பிரதிநிதிகளான எங்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை இதன் காரணமாகவே ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தேன் என தெரிவித்தார்.
பல கோடி ரூபாய்கள் வடக்கு பிரதேசசெயலகத்திலே மக்களிற்கு செல்லவேண்டிய பணம் கையாடப்பட்டுள்து. இது தொடர்பாக 18 குற்றசாட்டுகள் இதுவரை தன்னிடம் கிடைக்கபெற்றிருக்கிறது என தெரிவித்துள்ளார்
வடக்கு மாகாணசபையில் அடுத்த முதல்வராக யாரை பரிந்துரைப்பீர்கள் என ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்

படித்தவர்கள் தான் இந்த சமூகத்தை வழிநடத்த வேண்டும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கல்வியாளர்கள்தான் புனரமைப்பார்கள் என்பதைவிட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் மனப்பாங்கு உள்ளவர்களே அரசியல் செய்ய தகுதியானவர்கள். வடக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியாக முதல்வர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 13 =

*