;
Athirady Tamil News

ஆசிரியர் நிரந்தர நியமனத்தில் தாங்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து! கல்வி வலயத்தை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்..!! (படங்கள்)

0

ஆசிரியர் நிரந்தர நியமனத்தில் தாங்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து சில தொண்டர் ஆசிரியர்கள் சிலர் இன்று (17) வவுனியா தெற்கு கல்வி வலயத்தை முற்றுகையிட்டனர்.

ஆசிரியர் நியமனத்தில் தொண்டர் ஆசிரியர்களாகிய தாங்கள் உள்வாங்கப்படாததற்கு சரியான காரணங்களை கல்வி அமைச்சு கூறவில்லை என குற்றஞ்சாட்டினர்.

அதனைத்தொடர்ந்து தங்கள் நியமனம் நிராகரிக்கப்பட்டமைக்கு நடவடிக்கை எடுக்க கோரி வவனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் எந்த ஆசிரியரும்; பணியாற்;ற வராத கிராமப் புறங்களில் பணியாற்றிய எமக்கு நிரந்தர நியமனத்திற்கான கடிதங்கள் அனுப்படவில்லை, நிரந்தர நியமனம் வழங்கப்ட்ட பெயர் பட்டியலிலும் எங்கள் பெயர் இல்லை ஆனால் தொண்டர் ஆசிரியராக பணியாற்றியமைக்கான அடையாள அட்டைகள் எங்களுக்கு வழங்கப்ட்டுள்ளது என்பதுடன் நியமனத்திற்கான விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டர் ஆசிரியராக சேவையாற்றியமைக்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ள போதும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம், எனவே எங்கள் நியமனத்திற்கு அதிகாரிகள் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − three =

*