;
Athirady Tamil News

தமிழ் பாடசாலைகளுக்கு சிங்கள மொழியில் விடைத்தாள்கள் அனுப்பி வைப்பு..!! (படங்கள்)

0

மத்திய மாகாண கல்விதிணைக்களத்தினால் ஒவ்வொரு வருடமும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக தவணை பரீட்சைகளையும் முன்னோடி பரீட்சைகளையும் நடாத்திவருகின்றது.

மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ்,சிங்களமொழி மூலம் பயிலும் சகல உயர்தர பாடசாலைகளுக்குமான வினா பத்திரங்களை தயாரித்து விநியோகிப்பதுடன் அவற்றிற்கான விடைதாள்களையும் வழங்கிவருகின்றது.

அந்தவகையில் 2018ஆம் ஆண்டிற்கான முன்னோடி பரீட்சை தற்போது மத்திய மாகாண பாடசாலைகளில் நடைபெற்றுவருகின்றன.

இருந்தபோதிலும் இப்பரீட்சை வினாப்பத்திரங்களுக்கான புள்ளி மதிப்பீடு செய்வதற்கான விடைதாள்களை அனுப்புவதில் மத்திய மாகாண தமிழ் கல்வி அதிகாரிகள் அலட்சியபோக்குடன் செயல்பட்டு வருவதாக பாடசாலை நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தரம் 12, 13 விஞ்ஞானபிரிவின்
இரசாயணவியல்,பௌதீகவியல்,உயிரியல் ஆகிய பாடங்களுக்கும் தரம் 13 தொடர்பாடலும் ஊடககல்வியும் பாடத்திற்குமான விடைதாள்கள் அனைத்தும் சிங்கள மொழியிலேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் சிங்கள மொழியில் உள்ள விடைதாள்களை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்து மாணவர்களின் விடைதாள்களை மதிப்பீடு செய்வதில் தமிழ் பாடசாலையின் ஆசிரியர்கள் பல சிரமங்களுக்குமுகம் கொடுத்துவருவதாக தெரிவிக்கின்றனர்.

பொறுப்பு வாய்ந்த தமிழ் கல்வி அதிகாரிகள் இவ்வாறு தமிழ் பாடசாலைகளை புறக்கணித்து செயல்படுவது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுவாக பரீட்சை வினாத்தாள்கள் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டு அவை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறே விடைத்தாள்களையும் தமிழுக்கு மொழி பெயர்க்காது தமிழ் பாடசாலைகளுக்கு விநியோகித்தமை குறித்து பாடசாலை நிர்வாகங்கள் விசனம் தெரிவித்தனர்.

எனவே குறித்த பாடங்களுக்கான விடைத்தாள்களை தமிழ் மொழியில் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயற்படவேண்டும் எனகேட்டுக் கொள்வதோடு இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நிகழாதவண்ணம் தமிழ் கல்வி அதிகாரிகள் செயற்பட வேண்டுமென்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி சமூகம் வேண்டுகோள் விடுக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 3 =

*