;
Athirady Tamil News

அவைத்தலைவர் பதவிக்காலம் முடியும் வரை செயற்படலாம்: விக்னேஸ்வரன்..!!

0

வடக்கு மாகாண சபையைக் கலைப்பதற்கு சட்டம் இடம்கொடுக்காது என தெரிவித்த முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பதவிக்காலம் முடியும் வரை சீ.வி.கே.சிவஞானம் அவைத்தலைவர் பதவியில் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கலைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவைத்தலைவர் கூறுவதாகவும் அதில் எவ்வித உண்மைத்தன்மை காணப்படுகின்றது என ஊடகவியலாளரினால் எழுப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு மாகாணத்தின் ஆளுநர் தானே பிழை செய்துவிட்டு தன் பிழையை வைத்தே மாகாண ஆட்சியைக் கலைக்க முடியுமென்றால் மத்திய அரசாங்கம் அதைச்செய்தே அனைத்து மாகாண சபைகளையும் கலைத்துவிடலாம்.

மேன்முறையீட்டுமன்றின் தீர்ப்புக்குக் காரணம் எமது ஆளுநர் அரச வர்த்தமானியில், அமைச்சர் டெனீஸ்வரனை நீக்கியது பற்றி பிரசுரிக்காமையினால், வடக்கு மாகாண சபை சார்பாக ஆளுநர் தானே ஒரு முக்கியமான செயலைச் செய்யாதபோது அந்த விடயத்தினை முன்வைத்து வட மாகாண சபையை கலைக்க சட்டம் இடம் கொடுக்காது.

ஆதலால் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தொடர்ந்து எமது பதவிக்காலம் வரையில் அவைத் தலைவராகவே செயற்பட முடியம் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 13 =

*