;
Athirady Tamil News

கத்திரிக்காயில் குவிந்து கிடக்கும் அதிசயங்கள்..!!

0

உங்களுக்கு கத்திரிக்காய் மிகவும் பிடிக்குமா? கத்திரிக்காயின் காம்பை அதனுடைய கிரீடம் என நினைக்கும் எண்ணற்ற மக்களில் நீங்களும் ஒருவரா? மேலே கூறிய கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் எனில் இந்தக் கட்டுரையீன் மூலம் கத்திரிக்காயின் அதிசயங்களை மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

கத்தரிக்காய் உலகம் முழுவதும் எக் பிளாண்ட் என அழைக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் உள்ள ஊட்டச்சது நிபுணர்கள் இதை உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.

ஏனெனில் இதில் அதிக அளவிலான ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இதில் ஏராளமான வைட்டமின்கள், கனிமங்கள், நார் சத்துக்கள், நாசுனின் மற்றும் க்லோரோஜெனிக் அமிலம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளது.

கத்தரிக்காயின் சதையில் அதிக அளவிலான அந்தோசியனின்கள் உள்ளது. ஆய்வுகளின் முடிவுகளின் படி, இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட், புற்றுநோய், முதுமை, வீக்கம் மற்றும் நரம்பியல் நோய்களை தடுக்கும் என கருதப்படுகின்றது.

இரத்தம் உறைவதை தடுக்கிறது
கத்தரிக்காயினால் இரத்த கட்டிகள் உருவாவதை தடுக்க முடியும். இதில் உள்ள வைட்டமின் கே, மற்றும் அதிக அளவிலான ஃபிளாவொனாய்டு ரத்தம் உறைவதை தடுக்கின்றது.

கொழுப்பை குறைக்கிறது
ஒழுங்காக சமைத்த கத்தரிக்காய் உடலில் உள்ள கெட்ட (எல்டிஎல்) கொழுப்பை குறைக்க உதவுகின்றது. வறுத்த கத்திரிக்காய் கொழுப்பை கறைக்க உதவாது. எனவே கத்திரிக்காயை எப்பொழுதும் சமைத்து சாப்பிடவும்.

செரிமான மண்டலத்தை பாதுகாக்கிறது
கத்தரிக்காயில் அதிக அளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. எனவே இது உடலின் செரிமான மண்டலத்தை பாதுகாக்கின்றது. இது கத்திரிக்காயின் மிக முக்கிய பலன்களில் ஒன்றாகும்.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
கத்தரிக்காயின் மற்றொரு முக்கிய பலன்களில் ஒன்று இது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இதை வழக்கமாக எடுத்துக் கொள்ளும் பொழுது இதில் உள்ள ஊட்டச்சத்துகள் நம்முடைய மூளையின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது
கத்திரிக்காயில் உள்ள அதிக அளவிலான ஃபிளாவொனாய்டு இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

ஊட்டச்சத்துக்களின் உறைவிடம்
கத்தரிக்காயில் நம் உடலுக்குத் தேவையான இரும்பு, கால்சியம் போன்ற ஆரோக்கியமான தாதுக்கள் அதிக அளவில் உள்ளது.

இந்தியாவில் தொன்றுதொட்டு கத்தரிக்காயைப் பயன்படுத்தியதற்கான புராணகாலத்துச் சான்றுகள் உள்ளன. ஆனாலும் சீனாவில் தான் முதல் முதலாக கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் பயிரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அது ஆப்பிரிக்கா, ஐரோப்பா என்று பல பகுதிகளிலும் அறிமுகமாகி, பல நூற்றாண்டுகளுக்குப் பின் உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்பட்டது.

தற்போது, கத்தரிக்காய் உற்பத்தியில் இத்தாலி, துருக்கி, எகிப்து, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தான் முன்னணியில் உள்ளன. இந்தியாவில் மட்டுமின்றி, சீனா, இத்தாலி, மத்திய கிழக்கு மற்றும் மொராக்கோ நாடுகளிலும் கத்தரிக்காயை விதவிதமான டிஷ்ஷாகப் பயன்படுத்துகிறார்கள்.

கத்தரிக்காயின் தாவரவியல் பெயர் சொலானம் மெலோஞ்சினா என்பதாகும். சொலானாசியே என்ற குடும்ப வகையைச் சேர்ந்த கத்தரிக்காய், முட்டை செடி மற்றும் ஆபர்ஜீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

பல வடிவங்களிலும் வண்ணங்களிலும் கத்தரிக்காய் கிடைத்தாலும், முட்டை வடிவம் அல்லது நீளமாக இருக்கும் கத்தரிக்காய்கள் தான் அதிகம் பயிரிடப்படுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*