;
Athirady Tamil News

வாக்கிங் ஸ்டிக்கால் திருடர்களை அடித்து துரத்திய 103 வயது பாட்டி..!!

0

நேற்று மாலை 4 மணியளவில் பெர்லினிலுள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்களை 103 வயது பாட்டி ஒருவர் தனது வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து துரத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெர்லினில் நேற்றைய தினம் ஓய்வு பெற்ற ஒரு பெண்மணியின் வீட்டில் நுழைந்த இரு பெண்கள் அவரை கிச்சன் வரை தள்ளிக் கொண்டுபோய் அவரிடம் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடுவது போல் நடித்து திருட முயன்றனர்.

அவர்களுக்கு உதவியாக ஒரு ஆண் வீட்டுக்கு வெளியில் நிற்க, அவன் உள்ளே வருவதற்கு வசதியாக அந்த பெண்கள் கதவையும் திறந்து வைத்திருந்தனர்.

ஆனால், சாமர்த்தியசாலியான அந்த பாட்டியை அவர்களால் அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றிவிட முடியவில்லை.

அந்த ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த அவர், தன்னை ஒரு பெண் நெருங்கவும், தனது வாக்கிங் ஸ்டிக்கால் அவளைத் தடுத்ததோடு, இருவரையும் அடித்து துரத்தியிருக்கிறார்.

அவர்கள் ஓடுவதைக் கண்டு வெளியே காத்திருந்த அந்த மூன்றாவது நபரும் கூட சேர்ந்து ஓடிவிட்டார்.

இது வயதானவர்களை ஏமாற்ற திருடர்கள் மேற்கொள்ளும் வழக்கமான ட்ரிக் என்று கூறியுள்ள பொலிசார், தெரியாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 2 =

*