;
Athirady Tamil News

தாய்-மகள் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென்று விழுந்த 362 கிலோ பாறை! நசுக்கப்பட்டு இறந்த பரிதாபம்..!!

0

அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த தாய் மற்றும் மகள் பரிதாபமாக இறந்த சம்பவத்தில் டிரக் ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த Karen Christiansen என்பவர் தன் மகள், Jena(32)-வுடன் கடந்த திங்கட் கிழமை மதியவேளையில் Minnesota சாலையில் Toyota Avalon காரில் சென்றுள்ளார்

அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த டிரக் லாரியிலிருந்து சுமார் 362 கிலோ எடை கொண்ட பாறை, டிரக்கிலிருந்து நழுவி இவர்கள் சென்று கொண்டிருந்த காரின் மீது விழுந்துள்ளது.

இதனால் கார் நசுங்கியதால், காரின் உள்ளே இருந்த இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த் தீயணைப்பு துறையினர் காரின் மேலே விழுந்த அந்த பாறையை அகற்றியுள்ளனர்

டிரக்கில் இருந்து பாறை விழுந்துவிட்டது என்பதை அறிந்த டிரக்கின் ஓட்டுனர், டிரக்கை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் இது தொடர்பாக பொலிசார் அங்கிருந்த சிசிடிவி கமெராக்களை ஆராய்ந்து பார்த்த போது டிரக் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில், அந்த ஓட்டுனரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அவரின் பெயர் Joe Czeck(33) எனவும் கடந்த புதன் கிழமை அவனை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + nine =

*