;
Athirady Tamil News

மன்னித்துவிடு இளவரசி: உயிர்த்தோழியின் காதில் முணுமுணுத்தவாறே 17 முறை கத்தியால் குத்திய இளம்பெண்..!!

0

பிரித்தானியாவில் இளம்பெண்கள் இருவரின் வார இறுதி கொண்டாட்டம் கொடூரமான கொலைவெறித் தாக்குதலில் முடிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் குடியிருந்து வருபவர் 25 வயதான சாரா ஹோல்டன்.

இவரது உயிர்த்தோழியான 26 வயது ஷவுனா லிட்டில்வுட் என்பவருடன் இணைந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வார இறுதியை கொண்டாடியுள்ளனர்.

இருவரும் தேவைக்கு அதிகமாக மது அருந்தி இருந்துள்ளனர். இதனால் நிலை தடுமாறிய இருவரும் உடல் உறவும் வைத்துக் கொண்டுள்ளனர்

20 ஆண்டுகள் நட்பாக பழகிய இருவரும் முதல் முறையாக அன்று பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளனர்.

ஒருகட்டத்தில் தமது தோழியான சாராவை கட்டிலில் கயிறால் பிணைத்த லிட்டில்வுட், அதன் பின்னர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டுள்ளார்.

சமையல் அறைக்கு சென்ற அவர் கத்தி ஒன்றை மறைத்து எடுத்து வந்து, பின்னர் தமது தோழியை முத்தமிட்டுள்ளார்.

பின்னர் அவரது காதின் அருகே சென்று மன்னித்துவிடு இளவரசியே என முணுமுணுத்தபடியே மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கத்துவங்கியுள்ளார்

மொத்தம் 17 முறை கத்தியால் ஆழமாக தாக்கியதில் சாரா ரத்தவெள்ளத்தில் நினைவிழந்துள்ளார்.

அவரது இதயத்தின் அருகாமையில் கத்தி ஆழமாக இறங்கியுள்ளது. நுரையீரல் சேதமடைந்துள்ளது. முகத்தில் மட்டும் 50 தையல் இடவேண்டியிருந்தது. கால்கள், மார்பு மற்றும் கழுத்திலும் காயங்கள் ஏற்பட்டது

இதனிடையே தமது தோழியை 17 முறை கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு லிட்டில்வுட் தமது குடும்ப நண்பர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து நடந்தவற்றை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்

இந்த வழக்கு விசாரணையானது லீட்ஸ் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சாராவின் உருக்கமான வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

சவுனா லிட்டில்வுட் ஏன் தம்மை இவ்வாறு கொடூரமாக தாக்கினார் என்பதை இதுவரை தம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என கூறும் சாரா, அவர் எனது உடலை மட்டுமல்ல 20 ஆண்டுகால நட்பையும் கந்தல் கத்தலாக சிதைத்துள்ளார் என்றார்.

கத்தியால் ஒவ்வொருமுறையும் மூர்க்கத்தனமாக சவுனா ஓங்கி குத்தும்போது என்னால் ஒரு வார்த்தை கூட உதவி கேட்டு கூச்சலிட முடியவில்லை. பயம் எனது வார்த்தைகளை ஸ்தம்பிக்க வைத்தது என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

தற்போது திட்டமிட்ட கொலை முயற்சி என ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சவுனா லிட்டில்வுட், அடுத்த 7 ஆண்டுகள் தண்டனை முடித்த பின்னரே பிணையில் வெளிவர முடியும்.

சாரா தீவிர சிகிச்சைக்கு பின்னர் தற்போது சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார். ஆனால் இதுவரை சவுனா லிட்டில்வுட் ஏன் தமது தோழியை கொலை செய்ய முயன்றார் என்பது மர்மமாகவே உள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 10 =

*