;
Athirady Tamil News

இரண்டு விபத்துக்களில் இருவர் பலி..!!

0

கண்டி – பதியதலாவ வீதியின் தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் 34 வயதுடைய ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு நபர் சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தம்புள்ள – ஹபரன வீதியின் திகம்பத்தன இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லொறி ஒன்றுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் கெப் வாகனத்தில் பயணித்த மூவர் மற்றும் லொறியில் பயணித்த இருவரை தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

49 வயதுடைய கெப் வாகனத்தில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + four =

*