;
Athirady Tamil News

15 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான தங்க துண்டுகளுடன் இந்தியர்கள் கைது..!!

0

சட்ட விரோதமான முறையில் தங்க துண்டுகளை எடுத்துச் செல்ல முற்பட்ட இந்தியர்கள் நால்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தியாவின் சென்னை நோக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் அவர்களை ஸ்கோன் இயந்திரத்தின் மூலம் பரிசோதனை செய்த போது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்து தங்க துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர்களின் உடலில் இருந்து 15 இலட்சம் ரூபாவிற்கு அதிகமான 12 தங்க துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − fourteen =

*