;
Athirady Tamil News

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பிரதேச சபை உறுப்பினர் நியமனம்..!!

0

கிளிநொச்சியின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக கரைச்சி பிரதேச சபையின் ஜக்கிய தேசிய கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான எஸ். விஜயராஜன் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதியால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதமும் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதி அமைச்சர் அங்கஜன் .இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் இருந்து வந்த நிலையில் தற்போது கரைச்சி பிரதேச சபையின் ஜக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் எஸ்.விஜயராஜனும் நியமிக்கப்பட்டுள்ளார்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × three =

*