;
Athirady Tamil News

அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மத தலைவர் இம்ரான் கட்சிக்கு ஆதரவு..!!

0

பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் சில மாகாணங்களுக்கான தேர்தல் வரும் 125ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெக்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இம்ரான்கான் கட்சிக்கு அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட மத தலைவர் மவுலானா பர்சூல் ரகுமான் கலீல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹர்கதுல் முஜாஹிதின் அமைப்பை சேர்ந்தவர் மவுலானா பர்சூல் ரகுமான் கலீல். இந்த அமைப்பு மீது அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 11 =

*