;
Athirady Tamil News

சுவிட்சர்லாந்தில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் தற்கொலை எண்ணம்: ஆய்வில் பகீர் தகவல்..!!

0

சுவிட்சர்லாந்தில் சமீப காலமாக உளவியல் பிரச்னையால் மருத்துவமனை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய ஊடகப்பிரிவு ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலான இளைஞர்கள் மனக்கவலை, பசியின்மை, மன அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான தற்கொலை எண்ணம் உள்ளிட்ட காரணங்களாலும் தற்கொலை முயற்சி மேற்கொள்வதாலும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு வரும் சூரிச் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2007 ஆம் ஆண்டு வெறும் 46 சம்பவம் என இருந்த இந்த எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டு 650 என பலமடங்கு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் 90 சதவிகித சம்பவங்களும் தன்னைதானே வருத்திக்கொள்ளும் மன நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.மட்டுமின்றி பெர்ன் மற்றும் ஆர்கோவ் மாகாணங்களில் உளவியல் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் சுவிட்சர்லாந்தில் மரணமடையும் 15 முதல் 19 வயது வரையான இளைஞர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.2015 ஆம் ஆண்டு சுமார் 35 இளைஞர்கள் உளவியல் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 19 =

*