;
Athirady Tamil News

2 வயது பிள்ளையை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயார்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

0

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இரண்டே வயதான பெற்ற பிள்ளயை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்ற தாயாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருந்து வருபவர் சாரா பீட்டர்ஸ் என்ற 25 வயது பெண்மணி. இவருக்கே 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சம்பவத்தன்று தமது இரண்டே வயதான மகளை நபர் ஒருவரின் கோரிக்கையை ஏற்று பாலியல் துஷ்பிரயோகத்திற்காக 1,200 டொலருக்கு விற்க முயன்றுள்ளார்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தையை வாங்கிக்கொள்ள வந்தவர் மாறுவேடத்தில் வந்த பொலிசார் என அதன்பின்னரே தெரியவந்தது

இந்த வழக்கு விசாரணையில், குறித்த பெண்மணி தமது குழந்தையின் நிர்வாண புகைப்படங்களை அனுப்பி வைத்து பேரம் பேசியுள்ளதும் தெரியவந்தது.

மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள 40 மைல்கள் தொலைவு பயணம் செய்து அந்த பச்சைக்குழந்தையை துஷ்பிரயோகத்திற்காக விற்க முயன்றுள்ளார்.

இதனிடையே இணையத்தில் சந்தித்த நபரிடம் 1,200 டொலர் கட்டணத்தில் தமது மகளை பயன்படுத்திக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 22 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சாரா பீட்டர்ஸ் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.

தற்போது இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் சாராவுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மட்டுமின்றி 2038 வரை அவருக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 5 =

*