;
Athirady Tamil News

கல்முனை அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா உதவ வேண்டும்: கல்முனை முதல்வர்..!!

0

கல்முனை மாநகர சபையின் அபிவிருத்திக்கு அவுஸ்ரேலியா அரசாங்கம் உதவ முன்வர வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப், அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்துள்ள அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸன் இன்று (புதன்கிழமை) கல்முனை மாநகர சபைக்கு விஜயம் மேற்கொண்டு முதல்வர் ஏ.எம்.றகீபை சந்தித்து கலந்துரையாடினார்.

இக் கலந்துரையாடலின் போது திண்மக் கழிவகற்றல் சேவையை முன்னெடுப்பதில் மாநகர சபை எதிர்நோக்கும் சவால்கள், அதனை மேம்படுத்துவதற்கு தேவையான வளங்கள், தீயணைப்பு படைப் பிரிவை பலப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அத்துடன் இவற்றை மேம்படுத்துவதற்கு அவுஸ்ரேலியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, இவ்விடயத்தில் கரிசணை கொள்வதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், தமது நீண்ட கால வேலைத் திட்டத்தில் இக்கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

மேலும் இந்த சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தின் சமகால அரசியல், சமூக, கலாசார, பொருளாதார விடயங்கள், யுத்தத்திற்கு பின்னர் இனங்களிடையான புரிந்துணர்வு, நல்லிணக்கம் தொடர்பிலும் இனங்களிடையே காணப்படுகின்ற காணிப் பிணக்குகள், குடியிருப்பு பிரச்சினைகள் தொடர்பிலும் அம்பாறை நகர பள்ளிவாசல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் சிங்கள – முஸ்லிம் இன முரண்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*