;
Athirady Tamil News

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்..!!

0

புதிய அரசியலமைப்பு தொடர்பான ஆலோசனை வரைபின் பிரதியை அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிடம் இன்று (புதன்கிழமை) சமர்ப்பிக்கவுள்ள நிலையில் அச்செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக இன்று ஆதவன் செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், சட்டமூலப் பிரதி கையளிப்பை ஒரு முக்கிய தருணமாக கருதுவதாகக் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயற்பாடு நீண்டகாலமாக தொடரும் தேசிய இன பிரச்சினைக்கு தீர்வினை எட்டுவதற்கு சாதகமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் செயற்பாடுகள் சாதகமாக அமையாது என தென்னிலங்கை அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்திருந்த நிலையிலே சுமந்திரன் இவ்வாறு வரவேற்றுள்ளார்.

அரசியலமைப்பு வழிநடத்தற்குழுவின் இடைக்கால அறிக்கை மற்றும் ஆறு துணைக் குழுக்களின் அறிக்கைகள் என்பவற்றை அடிப்படையாகக் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலப் பிரதி இன்று அரசியலமைப்பு வழிநடத்தற்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலப் பிரதியில் புதிய அரசியலமைப்பு தொடர்பான அரசியல் கட்சிகளின் கருத்துக்களை உள்ளடக்கிய குறிப்பொன்றும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − four =

*