;
Athirady Tamil News

ஆயுதம் வைத்திருப்பதை நிரூபிக்குமாறு அஸ்மீனுக்கு, அனந்தி சவால்..!!

0

தான் ஆயூதம் ஒன்றை வைத்திருப்பதாக கூறி வடமாகாண சபை உறுப்பினர் ஆயூப் அஸ்மீன் சபையை பிழையாக வழி நடத்தி இருப்பதாக வடமாகான அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வட மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

வடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.

குறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.

நான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை.

என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.

நான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது.

அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களுக்கு எதிராக ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.

என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்யவுள்ளேன்.

நாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*