;
Athirady Tamil News

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் பறிமுதல்..!!

0

இலங்கைக்கு கடத்துவதற்காக தமிழகத்தில் சீனியப்பதர்ஹா கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரளா கஞ்சாவை கீயூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

அத்துடன், கடத்தலில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்பதர்ஹா கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, இராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் மகேஸ் தலைமையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதன்போது, குறித்த கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுக் கொண்டிருந்த மூவரிடம் நடத்திய விசாரணைகளுக்கு அமைய போதைப்பொருள் கடத்தல் முயற்சி வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 152 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்படுள்ளன. 304 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட நிலையில் அதன் பெறுமதி 50 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*