;
Athirady Tamil News

காரைநகரில் வைக்கோல் பட்டடையில் தீ விபத்து..!! (படங்கள்)

0

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட களபூமியில் உள்ள வீடொன்றில் குவியப்பட்டிருந்த வைக்கோல் பட்டடை இன்று (18) தீப்பற்றிக்கொண்டது.

இது தொடர்பாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மிகத் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். காரைநகர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தீயணைப்பிற்கு தண்ணீரைத் தந்துதவினர்.

உரிய நேரத்திற்குள் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்காவிட்டால் அருகில் இருந்த மற்றைய வைக்கோல் பட்டடை மற்றும் அருகே இருந்த வீடு என்பனவும் தீக்கிரையாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − five =

*