;
Athirady Tamil News

இங்கிலாந்தின் அரசியாக 9 நாட்கள் மட்டுமே நீடித்த ஜேன் கிரே பதவியிழந்த நாள்: ஜூலை 19- 1553..!!

0

இங்கிலாந்து நாட்டின் அரசராக இருந்த 6-வது எட்வர்டு நீக்கப்பட்டபிறகு, 1953-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் தேதி அரசியாக ஜேன் கிரே பதவியேற்றார். மிக இளம் வயதில் பட்டத்திற்கு வந்தாலும் இவரது பதவிக்காலம் 9 நாட்கள் மட்டுமே நீடித்தது. ஜூலை 19-ம் தேதி அவர் பதவியை இழந்தார். அவருக்கு அடுத்து முதலாம் மேரி அரசியாக முடிசூட்டினார்.

பதவியை இழந்தபின்னர் ஜேன் கிரே நீண்ட காலம் உயிர்வாழ வில்லை. இவர் மீதான ராஜதுரோக குற்றம் உறுதி செய்யப்பட்டு லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஜேன். பின்னர் அடுத்த ஆண்டு அதாவது 1554 பிப்வரி 12-ம் தேதி அவரது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதனால் 17 வயதிலேயே அவரது வாழ்வு முடிந்தது. அதேநாளில் அவரது கணவரின் மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய சம்பவங்கள் வருமாறு:-

• 1979 – மத்திய அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய ஜனநாயக குடியரசு நாடான நிகரகுவாவின் தேசிய விடுதலை நாள்.

• 1870 – புரூசியா நாட்டின் மீது பிரான்ஸ் போரை ஆரம்பித்தது.

• 1900 – பாரிசில் முதலாவது சுரங்க ரெயில் சேவை தொடங்கியது.

• 1940 – இரண்டாம் உலகப் போரின்போது இத்தாலியப் போர்க்கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதில் 121 பேர் கொல்லப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eleven =

*