;
Athirady Tamil News

மும்பை – மகனுடன் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்த டாக்சி டிரைவர்..!!

0

மும்பையை சேர்ந்த எம்.எப்.ஷேக் கால்டாக்சி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சிறுவயதிலேயே பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் போதிய பண வசதி இல்லாத காரணத்தால் அவரால் நினைத்தபடி பட்டப்படிப்பு பயில முடியவில்லை.

இந்நிலையில், காலம் கடந்தாலும் தனது கனவை நிறைவேற்றும் விதமாக சமீபத்தில் ஷேக், அவரது மகனுடன் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. பட்டப்படிப்பை நிறைவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தான் முழுநேர வகுப்பில் படித்ததாகவும் தனது தந்தை பகுதி நேர வகுப்பில் வார விடுமுறை தினங்களில் மட்டுமே படித்ததாகவும் கூறிய ஷேக்கின் மகன், படிப்பில் தந்தையின் சந்தேகங்களை தீர்த்து வைத்தபோது மகிழ்ச்சியாக உணர்ந்ததாக தெரிவித்தார்.

கல்வி பயில விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் மட்டுமே போதுமானது வயது ஒரு தடையில்லை என்பது ஷேக்கின் விஷயத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − one =

*