;
Athirady Tamil News

வட மாகாணத்திற்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில்..!!

0

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் மங்கள் சமரவீர ஆகியோர் வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதிகளில் வடமாகாணத்திற்கான விஜயம் அமையவுள்ளது.

இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் கவனம் செலுத்தவுள்ளார்.

மேலும், அவர் இந்திய தூதுவர் தரஞ்சித் சிங் சந்துவுடன் இணைந்து பலாலி விமான நிலைய வளாகத்தைப் பார்வையிடவுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*