;
Athirady Tamil News

304 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது..!!

0

இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்ப தர்ஹா கடற்கரை மணலில் பதுக்கி வைத்திருந்த 304 கிலோ கேரள கஞ்சாவினை கீயூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே சீனியப்ப தர்ஹா கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரள கஞ்சாவினை கடத்த இருப்பதாக மண்டபம் தனி பிரிவு பொலிஸாரிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இராமேஸ்வரம் துனை கண்காணிப்பாளர் மகேஸ் தலைமையில் கடற்கரை பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதணை நடத்தினர்.

அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த முருகன், ஜெயகனேஷ், கீத்தீஸ்வரன் ஆகிய மூவரை பிடித்து விசாரணை செய்த போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக சீனியப்பா தர்ஹா கடற்கரை மணலில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியை தோண்டிய பொலிஸார் 152 கஞ்சா பொட்டலங்கலை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களில் மொத்தமாக 304 கிலோ கஞ்சா இருந்ததுள்ளதுடன் கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்து மண்டபம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக ராமநாதபுரம் கடலோரப் பகுதிகளிலிருந்து போதைப்பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்த வாரத்தில் 60 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கேரள கஞ்சா மற்றும் 50 இலட்சம் மதிப்பிலான கடல் குதிரைகள் தமிழக மற்றும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − eight =

*